search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிந்து நாசம்"

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
    • திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரியாகும். ஏரியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    கோட்டைக்குப்பம் பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கன்னியம்மன் திட்டில் மீன்பிடி உபகரணங்கள், வலைகள், பிளாஸ்டிக்

    தடுப்பு, கம்பு, இறால் வலை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் மீன்பிடி வலைகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அருகில் உள்ளவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு விரைந்தனர். அவர்கள் ஏரி தண்ணீர் மற்றும் மணலை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் எரிந்து கருகி நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் யாராவது தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மின் கசிவு ஏற்பட்டதால் விபரீதம்
    • சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த வட இலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 65). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விநாயகம், சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.

    விநாயகம் சென்னை யிலும், சங்கர் வேலூரிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் மீனா மட்டும் குடிசை வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனா மகன் விநாய கத்தை பார்ப்பதற்காக குடிசை வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று வீட்டில் மின் கசிவு ஏற்பட்டது.

    இதனால் திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வந்து பார்த்தபோது குடிசை வீடு எரிந்து கொண்டிருந்தது.

    தீயை அணைத்தனர்

    பின்னர் செய்யாறு தீயணைப்புத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அருகில் இந்த மற்றொரு சிலிண்டர் தீப்பிடித்துக் கொண்டிருந்ததை தீயணைப்பு வீரர்கள் மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.
    • மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் அருள்தாஸ். ஆட்டோ டிரைவர்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர்.

    இவர் கும்பகோணத்தில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

    இதன் அருகே உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர் சாமிநாதன், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

    3 வீடுகளும் குடிசை வீடுகளாகும்.

    இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அருகில் இருந்து வந்த ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.

    இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் தீ மளமள பிடித்து எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அருள்தாஸ் என்பவர் வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை, சேகர் வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வீட்டு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

    இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரிய வள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் வேலாயுதம் பாளையம் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு சொந்தமான பேட்டரி ஸ்கூட்டரில் தளவாபாளையம் அருகே மலையம்மன் திருமண மண்டபம் எதிரில் வந்து கொண்டிருந்த போது பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஸ்கூட்டரில் வேகமாக எழுந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் பேட்டரி ஸ்கூட்டர் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    • வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது
    • மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 56)விவசாயி. இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன் 4 பைக்குகளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

    பின்னர் நள்ளிரவில் வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து புகை வருவது கண்டு பிடிக்கட்டது.

    இதனையடுத்து வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பகுதி வழியாக செல்லும் மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.

    இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 பைக்குகளும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வண்டிகளும் எரிந்து சாம்பலாகியது.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவளூர் போலிசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        

    • இரவு 12 மணியளவில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்தனர்.
    • தீ பற்றியதில் இரண்டு இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏவி குளத்தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரபிக்.

    இவரது மனைவி நஸ்ரத் பீவி. இவருக்கு சொந்தமான வீடு அப்பகுதியில் உள்ளது.

    அந்த வீட்டின் கீழ்த்தளத்தை வாடகை விட்டுவிட்டு, மேல் தளத்தில் இவர் வசித்து வந்தார்.

    இவருடைய மகளும், மகனும் பயன்படுத்தும் 2 மோட்டார் சைக்கிகளை கீழ்வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி இருப்பது வழக்கம். அதேபோன்று நேற்று இரவு நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.

    திடீரென்று கீழ் வீட்டில் இருப்பவர்கள் இரவு 12 மணியளவில் வாசலில் நிறுத்தியுள்ள தங்களுடைய இரண்டு இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் கீழே வந்து வாகனத்தின் மீது தண்ணீர் விட்டு தீயை அணைத்தனர்.

    தீ பற்றியதில் இரண்டு இருசக்கர வாகன மும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

    இதுகுறித்து நசரத் பீவி பட்டுக்கோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மமான முறையில் எரிந்த இரண்டு சக்கர வாகனங்களில் எவ்வாறு தீ பற்றியது, வேறு யாரும் திட்டமிட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • முருகன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
    • தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள அக்கறைபாளையம் காந்தி நகரை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (வயது 40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சின்னசாமி படுத்து உறங்கினார். நள்ளிரவு நேரத்தில் சின்னசாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்து கூச்சலிட்டு வீட்டில் இருந்த அனைவரையும் சின்னமணி வெளியேற்றினார். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின. இதில் வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 22 ஆயிரம், 25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன், பீரோ, கட்டில், டிவி உள்பட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாயின. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் எரிந்து போன வீட்டை பார்வையிட்டார். தீவிபத்து குறித்து கச்சராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரவு தொழிற்சாலையில் திடீரென புகை வந்தது.
    • ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் (வயது47). இவர் அப்பகுதியில் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு இவரது தொழிற்சாலையில் திடீரென புகை வந்தது. தீ மளமள வென பற்றி எரிந்தது.

    இது குறித்து போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தீயணைப்பு நிலைங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

    இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசாார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமாக விபத்து நடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது.
    • முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலக்காணிக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு மகாலட்சுமி தேவேந்திரன் தலைவராக உள்ளார். இவர் அக்கிராமத்திலேயே உள்ள, அவருக்கு சொந்தமான தளம் ஒட்டிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவல் அறிந்த வானூர் தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், லேப்டாப், எல்.இ.டி. டிவி, இன்வெர்ட்டர் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அலவலர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.

    இந்த குடியிருப்பில் 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழே உள்ள தளத்தில் ஸ்ரீ வள்ளிபுத்தூரை சேர்ந்த முருகன் (வயது19), வடுகப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(20), வெங்கடேஷ்(20) ஆகிய 3 வாலிபர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்பில் வாலிபர்கள் வசிக்கும் தரை தளம் அருகே குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல நிறுத்தி விட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த தீ வாலிபர்கள் வசித்த வீட்டின் கதவின் மீது பரவி வீடு முழுவதும் புகை மூட்டமானது. இதனால் அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தீ வேகமாக பரவியதால் வாலிபர்கள் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் மூலம் ஜன்னலை உடைத்து தப்பி வெளியே வந்தனர்

    பின்னர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராமநாதபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் 4 மொபட்டுகள் எரிந்து நாசமானது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
    • அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
    • கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இன்று காலை திடீரென்று ராஜேந்திரன் கூரை வீட்டிலிருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் புகைமண்டலம் தீயாக மாறியது. இந்த தீ அருகாமையிலிருந்த சுப்பராயலு என்பவரின் இரண்டு கூரை வீட்டிலும் பரவி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி எரிந்தததை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவில் வந்து போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 3 கூரை வீடும் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.

    ×